பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசுப்பள்ளி மாணவி சாதனை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று 10.05.24 காலை 9.30 அளவில் வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் வே.தபித்தா 485/100 மதிப்பெண்கள் பெற்றும், கா.தீபிகா ஶ்ரீ 477/500 மதிப்பெண்கள் பெற்றும், க.சோபியா 474/500 மதிப்பெண்கள் பெற்றும் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் வே.தபித்தா, கா.தீபிகா, அ.ஸ்டீபா ஆகிய மாணவிகள் கணித பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றும் க.சோபியா என்ற மாணவி சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றும் அசத்தியுள்ளனர்.
தொடந்து 7 ஆண்டுகளாக பொன்பெத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் சுமந்தும்,
தடுமாற்றத்தோடு தடம் மாறாமல் ஆங்கில பள்ளிக்கு ஈடு கொடுத்து இயங்கி கொண்டு தான் இருக்கிறது அரசுப்பள்ளி”
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று அசத்திய பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ செல்வங்களையும், சிறப்பான பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும் GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துகிறோம்.