கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக நடப்பட்ட மகிழமரம்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.21-
கோபாலப்பட்டினம் ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் நிர்வாகத்தால் ஒரு வருடம் வளர்ந்த நிலையில் உள்ள மகிழமரம் ஒன்று புதிதாக நடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் சார்பில் ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கபட வேண்டும் என்ற நோக்கிலும், பள்ளி வளாகத்தில் நிழல் தரக்கூடிய அளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் வேறு ஒரு இடத்தில் ஒரு வருடம் வளர்ந்த நிலையில் உள்ள ஒரு மகிழ மரத்தை (மவுலம் மரம்) வேரோடு பிடுங்கி அதனை பள்ளி வளாகத்தில் புதிதாக நடப்பட்டுள்ளது.
மகிழ மரத்தின் பயன்கள்
மகிழ மரங்கள், வீடுகளில், பூங்காக்களில் மற்றும் சுற்றுலா மையங்களில், இவற்றின் அற்புத நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும், நிழல் தரும் தன்மைக்காகவும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
மகிழ மரங்கள் வெப்பமான வெளிப்புறத்தை குளிர்ச்சியாக்கும் தன்மை மிக்கவை, காற்றில் உள்ள தூசு நச்சுக்களை வடிகட்டி, நல்ல காற்றை அளித்து, சுற்றுச்சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்கவை.
புகைப்படங்கள்