புருணை நாட்டில் “ஜாஃபரியா குழுமம்” சார்பில் ஜக்காத் வழங்கல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மூ.மூ.நசுருதீன் மற்றும் நூர்ஜகான் தம்பதியின் மகனான “ஜாஃபரியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்” M.M.N. ஜாபர் சாதிக் அவர்கள் புருனை நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கிளைகளில் சூப்பர் மார்க்கெட் நடத்திக்கொண்டு வருகிறார்.
ஜகாத் எனும் தான, தர்மங்கள்
அங்கு வருடா வருடம் ரமலான் மாதத்தை முன்னிட்டு புருணை நாட்டின் செங்குறாங்க் எனும் பகுதியில் உள்ள ஏழை, எளிய ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புருணை நாட்டின் செங்குறாங்க் பகுதி ஆட்சியரின் (கலெக்டர்) முன்னிலையில் ஜக்காத் எனும் தான, தர்மங்கள் வழங்கி வருகிறார்.
அதேபோன்று இந்த வருட ரமலான் மாதத்திலும் செங்குறாங்க் பகுதியில் உள்ள சுமார் 264 ஆதரவற்ற ஏழை எளிய பிள்ளைகளுக்கு அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான, தர்மங்கள் வழங்கினார்.
அத்துடன் சேர்த்து இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆதரவற்ற ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜக்காத் வழங்கல்
இப்தார் நிகழ்ச்சி முடிந்த பின் தொழிலதிபர் ஜாபர் சாதிக், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து ஜக்காத் பொருட்கள் மற்றும் தொகையினை வழங்கினர்.