புதுக்கோட்டை மாவட்டத்தின் 45-வது புதிய ஆட்சியராக மு.அருணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார்.
புதுக்கோட்டை மாவட்ட 45-வது புதிய ஆட்சியராக மு.அருணா ஐ.ஏ.எஸ் இன்று 19.07.2024 வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த மு.அருணா ஐ.ஏ.எஸ் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட அருணாவுக்கு அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்டத்தின் 45-வது கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பின் தற்போது 2024-ம் ஆண்டில் இதுவரை 44 கலெக்டர்கள் பணியாற்றியிருக்கின்றனர். தற்போது மு.அருணா ஐ.ஏ.எஸ் 45-வது கலெக்டராக பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு முன்பு பெண் கலெக்டர்கள் பணியாற்றிய இம்மாவட்டத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
மேலும் உங்கள் பணி சிறக்க GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.