புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்.
புதுக்கோட்டை, மார்ச்.28-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள். விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலெக்டர் தகவல்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் தேர்தல் விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில், 5,586 ஆண் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 4,118 பெண் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என மொத்தம் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், நகராட்சி ஆணையர் ஷியாமளா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.