புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு.
புதுக்கோட்டை, ஏப்.5-
புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மத்திய துணை ராணுவம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில் மத்திய துணை ராணுவப்படை, மாவட்ட போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிரடி மீட்புப்படை மற்றும் ஊர் காவல்படையை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை நகரில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கொடி அணி வகுப்பு
புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணி வகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக டவுன் ஹாலை சென்றடைந்தது. இந்த அணிவகுப்பில் 305 பேர் கலந்து கொண்டனர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராகவி, கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.