புதுக்கோட்டை அருகே ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டி.
புதுக்கோட்டை அருகே தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் பசு ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அது தற்போது கன்றினை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்கு மொத்தம் 6 கால்கள் இருக்கின்றன..
இதைப்பார்த்து அதிர்ந்து போன ஞானசேகரன், உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தந்தார். கால்நடை உதவி மருத்துவரும், நேரடியாக வந்து பசுவையும், கன்றினையும் பார்வையிட்டார். இதய துடிப்பு, மூச்சுக்காற்று, இரத்த ஓட்டம் எல்லாமே சீராக இருக்கிறதாம்.
இதுகுறித்து டாக்டர் சொன்னபோது, “இப்படி இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பதற்கு பாலிமெலியா எனப்படுகிறது. இவை மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்பட வாய்ப்புள்ளது.. எனினும், கன்றுகுட்டிக்கு குடற்புழு நீக்கம் மருந்து, கால்சியம் கலவை கொடுத்து நல்லமுறையில் வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகின்றன