புகையிலை பொருட்கள் விற்பனை; மளிகை கடைக்கு ‘சீல் ‘.
ஆவுடையார்கோவில், ஆக.23-
மீமிசல் அருகே பொன்பேத்தி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புனவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், திருப்புனவாசல் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜேம்ஸ் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொன்பேத்தியில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மளிகை கடைக்கு `சீல்’ வைத்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு தடைவிதித்தும், மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கடைகள் சீல் வைக்கப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
+1
+1
+1
+1