பிரதமரின் நிதி உதவி திட்டம்: வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை.

புதுக்கோட்டை, ஜூலை.1-

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை.

நிதி உதவி திட்டம்

பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் 1.2.2019-க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஏப்ரல்- செப்டம்பர், ஆகஸ்டு- நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3,571 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.

பதிவேற்றம்

இத்திட்டத்தில் ஆதார் எண் உள்ளிட்ட விவரம் பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 பயனாளிகள் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இத்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்துகொள்ள வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button