பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்.
மேல்முறையீடு செய்ய பரிசீலனை
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறையீடு செய்ய பரிசீலனை.
மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தகவல்.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம்
ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறிக்கொள்கிறோம்.
நேற்று மாலை 2 கிலோ கூடுதலாக உடல் எடை இருந்த நிலையில், இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்தார் வினேஷ்.
இவ்வளவு செய்தும் காலையில் சுமார் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில் வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
வினேஷ் போகத்தின் தனியுரிமைக்கு மரியாதை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு விளக்கம் கூறினர்.
100 கிராம் உடல் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், மக்கள் மன்றத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் வினேஷ் போகத்.