பத்திரப்பதிவு துறையில் 20 விதமான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு
பத்திரப்பதிவு துறையில் 20 விதமான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு
பத்திரப்பதிவு துறையில், 20 விதமான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு மற்றும் நிலம் வாங்குதல், கட்டுமான ஒப்பந்தங்கள், குத்தகை பத்திரங்கள், தானம், கிரயம், செட்டில்மென்ட் போன்ற ஆவணங்களுக்கு மக்களின் கட்டண அடிப்படையில் முத்திரைத்தாள் தேவைப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானமாக வரி கிடைக்கிறது.
முந்தைய ஆண்டில், முக்கிய பத்திரப்பதிவுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன, இதற்கு செட்டில்மென்ட் பத்திரங்களின் கட்டணமாக ரூ.10,000, மற்றும் பொது அதிகார ஆவணங்களின் கட்டணமாக ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, சிறிய மதிப்புடைய ஆவணங்களுக்கும் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.
கட்டண விவரங்கள்:
- சாதாரண செட்டில்மென்ட், வாடகை ஒப்பந்தம் போன்றவற்றுகளுக்காக வாங்கப்பட்டு வந்த ரூ.20 மூத்திரைத்தாள் கட்டணம், இனி செல்லாது.
- குறைந்த பட்சம் ரூ.200 கொண்ட முத்திரைத்தாள் மட்டுமே செல்லுபடியாகும்.
- ஒப்பந்தம் புதிய கட்டணம் ரூ.200 பழைய கட்டணம் ரூபாய் (20)
- தத்தெடுப்பு ஆவணம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (100),
- ரத்து ஆவணம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய்(50),
- நகல் கட்டணம் புதிய கட்டணம் ரூ 100 பழைய கட்டணம் ரூபாய்(20).
- அசல் நகல் புதிய கட்டணம் ரூ 500 பழைய கட்டணம் ரூபாய் (20).
- கூட்டு ஒப்பந்தம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (300),
- அடமான மறுபரிமாற்றம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80).
- பாதுகாப்பு பத்திரங்கள் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80),
- ஒப்பந்ததை ரத்து செய்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80),
- குத்தகையை விடுவித்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (40)
- டிரஸ்டிற்குள் பரிமாற்றம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (30),
- டிரஸ்ட் அறிவித்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (180),
- டிரஸ்ட் உரிமையை மீட்டெடுத்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (120).
கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த முறை லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வுகள் பல வருடங்களுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டதால், பல கட்டணங்கள் 2001ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.