நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய ஹுமாயூன் கபீர்; அதிகாரிகளுக்கு அழுத்தம்.
மீமிசல்,ஏப்ரல்.25-
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர். காவல் நிலையம் சென்று அதிகாரிகளை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் 22.04.2024 இரவு 11 மணிக்கு மேல் தனது கடையை அடைத்துவிட்டு, மீமிசலிலிருந்து தனது ஊரான கோபாலபட்டினத்திற்கு, ஊரின் பிராதான சாலை வழியாக செல்லும்பொழுது, நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் நைனா முகமது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் உள்ளனர்.
உறவினர்களுக்கு ஆறுதல்
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் இன்று 25.04.24 மாலை 4 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்று உறவினர்களுக்கு உறுதியளித்தார்.
அதிகாரிகளுடன் சந்திப்பு
அதன்பிறகு மீமிசல் காவல் நிலையத்திற்கு நிர்வாகிகளுடன் சென்ற ஹுமாயூன் கபீர் அங்கு A.S.P- மற்றும் D.S.P-ஐ சந்தித்து முதலில் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டறிந்தார். பின்பு விரைந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ஹுமாயூன் கபீர் பேசிய வீடியோ:-