நைனா முகமது அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.29-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள்கிழமை அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரையில் ஜனாஸாவை வாங்க மறுத்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒரு வார காலமாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்பொழுது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் ஜனாஸாவைப் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்வதாக உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 29.04.24 திங்கள்கிழமை மதியம் 3 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
13
+1
2