கோபாலப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த GPM உரிமைக் குழுவினர்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.04-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் கிராமத்தில் தர்கா அருகேயுள்ள போர் மோட்டார் பலுதானதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராமல் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் கோபாலப்பட்டினம் சமூக ஆர்வலர்களான GPM உரிமைக் குழு வாட்சப் குழுமம் சார்பில் கடந்த 3 நாட்களாக பலகட்ட முயற்சிகள் எடுத்து பழுதடைந்த போர் மோட்டாரை சரி செய்ய இன்றைய தினம் 04-04-2024 அன்று காலை 10 மணி முதல் இந்த பணிகளை தொடங்கி 1 மணி அளவில் நிறைவடைந்தது. அதன் பின் தண்ணீர் விநியோகம் சீரானது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்காக முயற்சி செய்த GPM உரிமைக் குழு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் அலுவலர் ஆகியோர் அனைவருக்கும் ஊர் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் கோபலாப்பட்டினம் மக்களின் பெருந்துயர் தீர்த்த GPM உரிமை குழு உறுப்பினர்களுக்கு GPM தலைமுறை மீடியா குழுமம் சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.