நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மீமிசல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி.
மீமிசல்,ஆக.14-
அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மீமிசல் லயன்ஸ் சங்கம் இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இப்பேரணியை கோட்டைப்பட்டினம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கெளதம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மீமிசல் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மீமிசல் லயன்ஸ் சங்க தலைவர் Ln.மீராசா மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் எடுத்து சென்று நியூ சங்கீத் பள்ளி வளாகம் முதல் மீமிசல் பேருந்து நிலையம் வரை பேரணியில் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பி மக்களுக்கு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் ஆசிரியர் ராமசாமி, நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.