தொகுதி கண்காணிப்பு குழு- பறக்கும் படையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம்.
ஆலங்குடி, மார்ச்.20-
ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் தொகுதி கண்காணிப்பு குழு, பறக்கும் படையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி முன்னிலை வகித்தார். நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒரு நிர்வாக நடுவர், 3 அல்லது 4 போலீஸ் அலுவலக சோதனை சாவடி அமைத்து செயல்படுத்த வேண்டும். தேவைப்படும் மத்திய போலீஸ் படையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து சோதனை நிகழ்வுகளும் வீடியோ எடுக்க வேண்டும். இக்குழுவினரால் நிர்வாக நடுவர் தினசரி அறிக்கையில் மாவட்ட தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய படிவத்தில் பதில் அளிக்க வேண் டும். செலவினங்கள் அதிகமாக இருக்கும் என அறியப்பட்டால் தேர்தல் நாளில் 3 நாட்களுக்கு முன் போலீஸ் பலப்படுத்த வேண்டும். பறக்கும் படையினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் முடியும் வரை செயல்பட வேண்டும். இக்குழுவில் துணை தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலா், துணை ஆய்வாளர், எழுத்தர், பறக்கும் படை தேர்தல் அலுவலர்கள் அனைத்து விதிமுறை மீறல்கள், மிரட்டல், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல், மதுபானங்கள், ஆயுதங்கள், வாக்காளர்களுக்கு அளிக்க அதிக அளவு ரொக்கம், வேட்பாளர் கொடுத்த புகார்கள், பொதுக்கூட்டம், அலுவலரால் கைப்பற்றப்படும் பொருட்கள் குறித்து உடனுக்குடன் தெரியபடுத்த வேண்டும். இவைகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் துணை தாசில்தாரும், ஆலங்குடி வருவாய் ஆய்வாளருமான பிரபாகரன், அரசு அலுவலர்கள், போலீசார்கலந்து கொண்டனர்.