தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: அறந்தாங்கியில் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவில்லை.
அறந்தாங்கி, மார்ச்.22-
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அறந்தாங்கி நகர் பகுதியில் பெரியார் சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை என தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படாமல் உள்ளது. மேலும், அம்மா உணவக பதாகையும் மறைக்கப்படவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1