திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலுடைய போரை நிறுத்த வலியுறுத்தி இலவச தோல் நோய் மருத்துவ முகாம்.
அறந்தாங்கி,அக்.15-
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலுடைய போரை நிறுத்த வலியுறுத்தி இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் மருத்துவர் ச.தட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினார்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலுடைய போரை நிறுத்த வலியுறுத்தி அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற இலவச தோல் சிகிச்சை மருத்துவர் முகாம் கராத்தே கண்ணயன் துவங்கி வைக்க மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினார்.
இம்முகாமில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன். மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது, தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜீவா சீனி, பிஸ்மி முபாரக், விஜயகுமார், மஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அஜ்மீர் அலி, மஜக மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட பொருளாளர் கிரீன் முகம்மது, பெரிய பள்ளிவாசல் ஜமாத் பொருளாளர் மன்சூர், தோழர் மதிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையிலும் 150 பேர் பயன்பெற்ற இந்த முகாமில் ரோட்டரி முன்னாள் தலைவர் கஃபார் கான் அனைவரையும் வரவேற்றார்.
இறுதியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு பொருளாளர் முகமது முபாரக் அனைவருக்கும் நன்றி கூறினார்.