தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு.
கிருஷ்ணாஜிப்பட்டினம்,ஏப்ரல்.28-
மக்கள் கோடை வெயிலால் அவதிப்படுகின்ற காரணத்தால் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வண்ணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையில் 27-04-24 அன்று கிருஷ்ணாஜிப்பட்டினம் கடைவீதியில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் முகமது மீரான்,துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துனை பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு கிளை நிர்வாகிகள் தலைவர் சாகுல் ஹமீது,செயலாளர் சைபுல் கரீம், பொருளாளர் சல்மான் துணைத்தலைவர் நஜிபுதீன் துணைசெயலாளர் அப்துல் காதர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1