ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.
ஜெகதாப்பட்டினம்,ஏப்ரல்.26-
ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை சண்முகம் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜெகதாப்பட்டினத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி ஆலோசனைப்படி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தலைமையில் தொடங்கியது.
தலைமை ஆசிரியர் எழில்மணி மற்றும் முன்னாள் மாணவர் செய்யது சபிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இப்பேரணியில்
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்போம்!
நம் பள்ளி.! நம் பெருமை.!
அரசு பள்ளி பெருமையின் அடையாளம்..!!
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்..!
புதுமைப்பெண் திட்டம்
நான் முதல்வன் திட்டம்
போன்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்த வாசகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி கடைத்தெரு வழியாக பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வினை ராஜா முகமது, அசன், அப்பாஸ் கான், ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்க்கை பேரணிக்கான செயல்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஜான் பீட்டர், சேன்சா பேகம் மற்றும் இசக்கியப்பன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.