ஜெகதாப்பட்டினத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா வருவாய்த்துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாசில்தார் ஷேக் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கட்டுமாவடியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் வாக்களிப்பதன் நன்மைகள் குறித்து அடங்கிய விளம்பர பதாகைகளை உடைபோல் அணிந்து கொண்டு சென்றனர். இதில் துணை தாசில்தார் முத்துக்கனி, மண்டல துணை தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1