கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.
கோபாலப்பட்டினம்,மார்ச்.25-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கோபாலப்பட்டினம் ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
சரியாக மாலை 6.27 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவாஸ் கனி
இந்நிகழ்வில் 2024 மக்களவைத் தேர்தல் இராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நவாஸ் கனி அவர்கள் பங்கேற்றார்.
சுற்றுவட்டார ஜாமத் நிர்வாகம் பங்கேற்பு:
கோபாலப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆர்.புதுப்பட்டினம், அரசனகரிபட்டினம், முத்துகுடா, பொய்யனூர், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் என அனைத்து ஜமாத் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
சுற்றுவட்டார பஞ்சாயத் நிர்வாகம் பங்கேற்பு:
மீமிசல் கிராமம், ஆலத்தூர் கிராமம் மற்றும் அனைத்து மத சகோதரர்கள், மத போதகர்கள் மீமிசல் சுற்றுவட்டார பகுதி சகோதரர்கள், கோபாலப்பட்டினம் ஜமாத்தார்கள் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோரிக்கைகள்:
இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு ஜும்மா பள்ளிவாசல் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு கூட்டத்தில் கோபாலப்பட்டினம் ஜமாத்தார்கள் ஊர் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை நவாஸ் கனியிடம் முன் வைத்தனர்.
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த பொழுது கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகத்திற்கு கல்யாண மண்டபம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் மண்டபம் கட்டித்தர இயலவில்லை என நவாஸ் கனி கூறினார். ஆனால் இந்த முறை கண்டிப்பாக கல்யாண மண்டபம் கட்டித் தருவதாக உறுதி கூறினார்.
ஐ.யூ.எம்.எல் நிர்வாகிகள் அறிவிப்பு:
அதேபோன்று இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
தலைவர்:சேக் முகமது
செயலாளர்:முகமது அசாருதீன்
பொருளாளர்:ஹாஜி அசாருதீன்
இறுதியாக இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊர் ஜமாத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
வீடியோ இணைப்பு