கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்

கோபாலப்பட்டினத்தில் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்

கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் இன்று மற்றும் நாளை அக். 23 மற்றும் 24 (புதன் மற்றும் வியாழக்கிழமை) நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை கோபாலப்பட்டினம் தங்க மஹால் திருமண மண்டபத்தில், ரூ. 5 லட்ச மதிப்பிலான முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஊரில் உள்ள GPM பொதுநல இ-சேவை மையம் மற்றும் ஹாஷியா இ-சேவை ஆகிய சேவை மையங்களில் ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்தவர்கள், குறிப்பிட்ட இரண்டு தினங்களில் திருமண மண்டபத்தில் நேரில் வருகை தந்து, புகைப்படம் எடுக்க வேண்டும்.

இதுவரை புதிதாக பதிவு செய்யாதவர்களும், தங்கள் ஆவணங்களுடன் வந்து புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி
GPM மக்கள் மேடை
, கோபாலப்பட்டினம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button