கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய Ex.எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்.எல்.ஏ ராமச்சந்திரன்.
கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை நேரில் சந்தித்து நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த, நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள் இரவு 11.30 மணி அளவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிமுன் அன்சாரி Ex.எம்.எல்.ஏ வருகை
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் நைனா முகமது குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்கும்போது மனம் படபடக்கிறது, கண்கள் குளமாகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். நைனா முகமது கொலை வழக்கு எவ்வித குறுக்கீடுகளும் திசை திருப்பும் முயற்சிகளுக்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் என்று கூறினார்.
இச்சந்திப்பின் போது மாநில துணை செயலாளர்கள் பேராவூரணி அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை சையது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, முகமது யாசின், மாவட்ட கலாச்சார பேரவை செயலாளர் நோக்கியா சாகுல், மாவட்ட அலுவல் செயலாளர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.
ராசந்திரன் எம்.எல்.ஏ வருகை
அடுத்தபடியாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வருகை புரிந்தார்.அப்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
பிறகு நைனா முகமது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூறியதாவது:-
இவ்வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினர் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதாகவும் உறுதியளித்தார்.
சந்திப்பின்போது அறந்தாங்கி 23-வது வார்டு கவுன்சிலர் அசாருதீன், கூடலூர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
புகைப்படங்கள்
தமிமுன் அன்சாரி Ex.எம்.எல்.ஏ
ராமச்சந்திரன் எம்.எல். ஏ