கோபாலப்பட்டினத்தில், படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்க மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி வருகை.
கோபாலப்பட்டினம்,மே.05-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை சந்திக்கவும், வழக்கு விசாரணை பற்றி காவல் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் பெறவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கோபாலப்பட்டினத்திற்கு வருகைதர உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோ.நைனா முகம்மது அவர்கள் கடந்த 22.04.2024 திங்கள் இரவு பின்னேரம் படுகொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்ட நைனா முகம்மது அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், மீமிசல் காவல் நிலையம் சென்று வழக்கு விசாரணை பற்றி காவல் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் பெறவும் இன்று (மே 05) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கோபாலப்பட்டினம் வருகை தர இருக்கிறார்.
மாநில துணை செயலாளர்கள் பேராவூரணி அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், விவசாயிகள் அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை சையது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, முகமது யாசின், மாவட்ட கலாச்சார பேரவை செயலாளர் நோக்கியா சாகுல், மாவட்ட விவசாயிகள் அணி செயலாளர் நாகூர் கனி, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ஷாஜகான், மாவட்ட அலுவல் செயலாளர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் வர இருக்கிறார்கள். இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.