கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கின; ரூ.8 லட்சத்திற்கு விற்பனை.
கோட்டைப்பட்டினம், மார்ச்.22-
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கும். அதேபோல் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று கரைத் திரும்பினர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கியிருந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன்கள் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே விசைப்படகில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கியது மீனவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
1
+1
+1