கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம்
கோட்டைப்பட்டினம், நவ.27-
கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம்
கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய கௌதம் அவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக கௌதம் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
சிறப்பாக பணியாற்றிய கௌதம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தனது பணி காலங்களில் சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களையும் இன்னல்களையும் சிறப்பாக கையாண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொண்டு வந்தார்.
கோட்டைப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கௌதம் DSP பணி மாறுதல் காரணமாக மற்றொரு பகுதிக்கு செல்லும் நிலையில், அவருக்கு சிறப்பாக வழியனுப்பும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கோட்டைப்பட்டினம் புதிய துணை காவல் கண்காணிப்பாளராக காயத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று 27 11 2024 புதன்கிழமை காவல்துறை துணை கண்காணிப்பாளர் காயத்திரி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட காயத்ரி அவர்களுக்கு காவலர்கள் அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.