கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கோட்டைப்பட்டினம், நவ.27-
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.
பலத்த மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனம ழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது. அந்த வகையில் கடற்கரை அமைந்துள்ள புதுக் கோட்டை மாவட்டத்திலும் கனமழைக்கு எச்சரிக்கை விடப் பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட் டது. பின்னர் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. கடற் கரையோரமான மணமேல்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்கள் பலர் வீட் டிற்குள்ளேயே முடங்கினர். மழையின் போது பயங்கர காற்றும் வீசியது.
நாட்டுப்படகு மீனவர்கள்
மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை உள்ள 32 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மீனவர்களின் நாட்டுப்படகுகள் கரையோரங் களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பெரிய மீன் மார்க்கெட்டுகளான கட்டுமாவடி, மணமேல் குடி உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து இல்லை. மீன்கள் வரத்து இல்லாததால் வாடிக்கையாளர் களும் வராமல் மீன்மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப் பட்டது. மீனவர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மீனவ கிரா மங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது.
விசைப்படகுகள்
இதேபோல கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி களில் பரவலாக மழை பெய்தது. விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. 2- வது நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் மீன்பிடி தளத்தின் கரை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மழை நிற்கும் வரையிலும், வானிலை ஆய்வு மையம் மறு அறிவிப்பு தெரிவிக்கும் வரையிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.