காணாமல் போன பாதுஷா கிடைத்துவிட்டார்: மீமிசல் காவல் நிலையத்திற்கு நன்றி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா (26) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்.
இது குறித்து மீமிசல் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில் மீமிசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி புகாரை ஏற்றுக் கொண்டு காணாமல் போன பாதுஷாவை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணையை மேற்கொண்டார்.
கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதம் வழிகாட்டுதலில், மீமிசல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மீமிசல் காவல் நிலைய காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு காணாமல் போன பாதுஷாவை நேற்று 27.09.24 வெள்ளிக்கிழமை பேராவூரணியில் இருந்து மீட்டெடுத்து மீமிசல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பின் அவரை அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சிறப்பாக செயல்பட்டு காணாமல் போன பாதுஷாவை மீட்டெடுத்த கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதம், மீமிசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி, காவலர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அனைவருக்கும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் GPM தலைமுறை மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.