கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.
புதுக்கோட்டை, ஏப்.26-
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பினை பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அனுமதிக்கு அனுப்பி வைத்தும், அனுமதிக்காமல் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும், இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரியை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1