கடலோர பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மைப்பணி.
கோட்டைப்பட்டினம், அக்.4-
தூய்மையே சேவை என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் மீமிசல் வரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் திட்ட அலுவலர் ரமேஷ் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான வடக்கு புதுக்குடி கிராமத்தில் இருந்து தெற்கு புதுக்குடி கிராமம் வரை கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியை கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.