எஸ்.பி.பட்டினத்தில் அரசு பள்ளிகளில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று 24.09.24 திடீரென ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் சுந்தர பிரதீபாவிடம் கேட்டறிந்தார். பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின்போது அமைச்சருக்கு எஸ்.பி.பட்டினம் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1