உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிப்பு.
கந்தர்வகோட்டை, மார்ச்.21-
கந்தர்வகோட்டை அருகே காட்டு நாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராஜாத்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துளிர் திறனறிவு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா கலந்து கொண்டு பேசுகையில், முதல் உலக சிட்டுக்குருவி தினம் 2010-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது. சிட்டுக்குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகளை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை இந்த தினம் வலியுறுத்துகிறது. இந்த சிறப்பு நாள் சிட்டுக்குருவிகள் மற்றும் பிற சிறிய பறவைகளின் அவல நிலையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக வாதிடமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருது சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன் கோபுரங்களில் இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவி இனம் இன்று வெகுவாக குறைந்துள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கப்பட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு என்றார். முன்னதாக துளிர் திறனறிவு ேதர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.