இளைஞர் முதல் பெரியவர் வரை இடம்பெற்ற கோபாலப்பட்டினம் புதிய ஜமாத் நிர்வாகம்!
கோபாலப்பட்டினம்,ஜூலை.05-
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இளைஞர் முதல் பெரியவர் வரை இடம்பெற்றுள்ள புதிய நிர்வாகத்தின் சுவாரசியங்கள் பற்றி பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் கடந்த 16.07.2021 அன்று தற்போதைய ஜமாத் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலம் பொறுப்பு கொண்ட அந்த ஜமாத் நிர்வாகத்தின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தனர்.
புதிய நிர்வாகம்
இந்நிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதை பற்றி ஊர் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று 05.07.24 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் கோபாலப்பட்டினம் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தினை ஒருங்கிணைத்த பாப்புலர் பள்ளி தாளாளர் யூசுப் அவர்கள் அனைவரையும் வரவேற்று புதிய நிர்வாகத்தின் பைலாவை முன்மொழிந்தார்.
அதன் பிறகு S.R.M. சேக் பரீத் மற்றும் பாவா மரைக்காயர் இவர்கள் தலைமையில் கும்பகோணம் ஆல்-வின்னர் வர்த்தக சங்கத்தினர் உட்பட 30 பேர் கொண்ட குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை செய்தனர்.
ஆலோசனையின் முடிவில் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட எழு பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர்களும், பதினோரு பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பின் ஊர் மக்கள் மத்தியில் சபையில் எழுந்து நின்று ஒருங்கிணைப்பாளர் யூசுப் அவர்கள் நிர்வாகிகளின் பெயர்களை முன்மொழிந்தார். நிர்வாக குழுவினர்களை ஆய்வு செய்வதற்கு உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டு அவர்களின் விவரங்களையும் முன்மொழிந்தார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜமாத் நிர்வாகத்தின் கால அளவு இரண்டு ஆண்டுகள் எனவும் குறிப்பிட்டார்.
நிர்வாகத்தில் இளைஞர்கள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் ஊரில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிரதிநிதி என்ற அடிப்படையிலும், நிர்வாக குழுவில் மது, சூது போன்ற தீய பழக்கம் கொண்டவர்கள் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்திலும், பழைய நிர்வாகத்தில் உள்ள நபர்கள் மீண்டும் வரக்கூடாது என்ற கோட்பாட்டில் அடிப்படையிலும் தற்போதைய புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஜமாத் நிர்வாகம்
நிர்வாக குழுவினர்
தலைவர்:R.S.M அன்சாரி
செயலாளர்:S. முகமது இபுராஹிம்
பொருளாளர்:மு.மு. பசீர் அலி
து.தலைவர்:R.M.A. நெய்னா முகமது
து.தலைவர்:R. அப்துல் காதர்
து.செயலாளர்:S. செய்யது முகமது
இ.செயலாளர்:A. முஷ்தாக் அகமது
உயர்மட்ட நிர்வாக குழுவினர்
OSM. முகமது அலி ஜின்னா
J. முகமது யூசுப்
M. ராஜா முகமது
V.E. உமர் ஹத்தா
V.M. உமர்
K.M.S.ஜின்னா
A. அலி அக்பர்
K.S.அப்பாஸ் கான்
மங்களம் சாதிக்
R. ருக்னுதீன்
Y. ஜகுபர்
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஊரின் வளர்ச்சிக்காகவும், ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல வீர தீர செயல் திட்டங்களை செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் மகிழ்ச்சி
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருமே சிறப்பு வாய்ந்தவர்கள், பள்ளியோடு தொடர்புடையவர்கள். இவர்கள் அனைவரும் நிர்வாகத்தை சீராகவும், சிறப்பாகவும் எடுத்துச் செல்வார்கள் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்து புதிய நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நன்றி
சிறப்பான நிர்வாகத்தை அமைத்துக் கொடுத்த கும்பகோணம் ஆல்-வின்னர்ஸ் வர்த்தக சங்கத்திற்கும், ஜமாத்தார்களுக்கும், ஊர் பொது மக்களுக்கும் G.P.M தலைமுறை மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாக குழுவினர் புகைப்படம்
பிற புகைப்படங்கள்