இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாளாக குறைப்பு
இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாளாக குறைப்பு
இந்திய இரயில்வே சமீபத்தில் இரயில் டிக்கெட் முன்பதிவின் கால அவகாசத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
முன்பு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தது. ஆனால், இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது, இதனால், பயண நாளுக்கு 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய விதிமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் முக்கிய நோக்கம், பயணிகள் அதிக அளவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு பின்னர் அதை ரத்து செய்யும் நடைமுறையை குறைப்பது.
இதனால், பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
இரயில்வே நிர்வாகம், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும், இரயிலில் உண்மையாக பயணிக்க விரும்பும் பயணிகள் டிக்கெட்டை சுலபமாக பெறவும் இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.