ஆவுடையார்கோவில் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்.

அறந்தாங்கி, செப்.24-

ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தில் ஏரியில் சிலர் வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு வண்டல் மண் அள்ளிய நபரை கண்டித்து ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமாதானம் அடைந்த அவர்களை தாசில்தார் மூலம் சமாதான கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து தற்காலிகமாக ஏரியில் வண்டல் மண் அள்ளியது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button