ஆர்.புதுப்பட்டினத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான “வெற்றிக்கு வழிகாட்டுவோம் நிகழ்ச்சி”.
ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டுவோம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் இணைந்து 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டுவோம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாள்: 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை.
இடம்: அல்-மஸ்ஜித் தக்வா, ஆர்.புதுப்பட்டினம்.
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
தலைப்புகள்
- எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்காலம்? எந்த கல்லூரியில் படிக்கலாம்?
- அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ?
- பெண்களுக்கு ஏற்ற படிப்புகளும் அதற்கான சிறந்த வாய்ப்புகளும்.
- குறைந்த செலவில் உள்ள சிறப்பான படிப்புகள்.
- குறைவான மதிப்பெண் எடுத்தவற்கான கல்வி வழி காட்டுதல்கள்.
வழிகாட்டல் வழங்குபவர்
M.அப்துல் மதீன் B.Tech., ஆலோசகர்கள், விஸ்டம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி.
உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவிகள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.