ஆர்.புதுப்பட்டினத்தில் நடந்த நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் கிராம சபை கூட்டம்.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் நேற்று 02.10.2024 புதன்கிழமை ஆர்.புதுபட்டினத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார்.
கோபாலப்பட்டினம் ஜமாத் பங்கேற்பு
நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டினம் சார்பில் ஜமாத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், மேல்சபை உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், GPM சொந்தங்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு என்று தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு சாலை வசதி ஏற்பாடு செய்து தரக்கோரி ஜமாத் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில்,
- பள்ளிக்கு புதிய கழிப்பறை வசதி செய்து தர வேண்டியும்,
- மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் சாலை வசதி செய்து தர வேண்டியும் மற்றும்
- பள்ளி வளாகம் சுற்றி ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்து தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பொது நிதி செலவீனம், மாற்று திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிளர்க் இல்லை
நட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு கடந்த ஆறு மாதங்களாக கிளர்க் மற்றும் பற்று வரவு செயலாளர் இல்லாத காரணத்தினால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அதனால் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட முடியாமல் கூட்டம் கலைந்தது.