ஆதார் சிறப்பு முகாம்.
கந்தர்வகோட்டை, ஜூன்.11-
கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தம் மாலதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரகாஷ் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி அகிலா சீனிவாசன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 15 வயதுக்கு பிறகு நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். ஆதாரை பிறந்தது முதல் பதிவு செய்யாத 7-15 வயது குழந்தைகளுக்கு பதிவுகளையும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த அாிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுப்பதையும், ஆதார் புதுப்பிக்கும் பணியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆதார் பணியாளர் கோகிலா தெரிவித்துள்ளார். இதில் இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா, ஆசிரியர்கள் ஜெயக்குமார், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி, மலர்விழி, நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதார் எடுக்கும் பணியை ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் வரவேற்றார். எல்காட் பணியாளர் செல்வி தனலட்சுமி ஆதார் எடுக்கும் பணியை மேற்கொண்டார்.