ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு
புதுக்கோட்டை, ஜூன்.12-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகம் தலைமையில் புதுக்கோட்டையில் 2 நாட்கள் நடைபெற்றது. இணைய வழி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 6 முதுகலை ஆசிரியர்களும், 48 பட்டதாரி ஆசிரியர்களும் ஆக மொத்தம் 54 நபர்கள் விரும்பிய மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்தனர். ஆசிரியர்களுக்கான ஆணையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) சண்முகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1