அறந்தாங்கி பெருநகரில் இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அறந்தாங்கி,செப்.6-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திமுக நகர பொருளாளர் பிச்சை முகமது மற்றும் காங்கிரஸ் நகர தலைவர் வீராசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 22வது வார்டு மற்றும் 5வது வார்டு ஆகியவற்றில் தலா 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடைகளை திறந்து வைத்தார்.
கூடலூர் முத்து, முருகன், ஏங்கல்ஸ், கார்த்திக், முரளி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முகம்மது ராவுத்தர் சலீம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், முனைவர் முபாரக் அலி, அஜ்மீர் அலி, அப்துல் ஹமீது உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.