அறந்தாங்கி திசைகள் அமைப்பு நடத்திய “அடுத்து என்ன படிக்கலாம்” வழிகாட்டி நிகழ்ச்சி.
அறந்தாங்கி,ஏப்ரல்.22
அறந்தாங்கியில் திசைகள் அமைப்பு நடத்திய “அடுத்து என்ன படிக்கலாம்” வழிகாட்டி நிகழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஐ.எம்.ஏ செயலாளர் மருத்துவர் சுதர்ஷன், பொருளாளர் மருத்துவர் இளையராஜா, திசைகள் பொருளாளர் முகம்மது முபாரக் ஆகியோர் முன்னிலையில் திசைகள் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்று துவக்க உரையாற்றினார்.
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், வேளாண் அலுவலர் முருகானந்தம், பொறியாளர்கள் கவின் பாரதி, கப்பார்கான், இயன்முறை மருத்துவர் காமராஜ், மொழி பேராசிரியர் சண்முகப்பிரியா, முனைவர் முபாரக் அலி, அறிவியல் ஆசிரியர் சண்முகப்பிரியா, நல்லாசிரியர் பாஸ்கரன், மருத்துவ கல்லூரி மாணவர் நாகராஜன் ஆகியோர் பனிரெண்டாம் வகுப்பு முடித்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி உரையாற்றினார்கள். இறுதியில் ஆன்டோ பிரவீன் நன்றி கூறினார்.