அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அடுக்குமாடி பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து.
அறந்தாங்கி,மார்ச்.25-
அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அடுக்குமாடி பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து. தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அடுக்குமாடி பாத்திரக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. மலமலவென பரவிய அந்த தீ கடை முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ பரவி அருகில் இருந்த நகை கடை மற்றும் மெட்டல் கடைகளிலும் பற்றி எரிய ஆரம்பித்தது.
உடனே அறந்தாங்கி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்து வருகின்றனர்.
ஆனால் போதுமான தீயணைப்பு வாகனம் இல்லாததால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை ஆகையால் கடை முழுவதுமாக தீ பரவி முற்றிலும் எரிந்து தீயில் கருகியது.
காலை 6 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பாத்திரக்கடை, நகைக் கடை மற்றும் மெட்டல் கடை முழுவதும் தீயில் எரிந்து பலகோடி ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மேலும் தீ விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ இணைப்பு: