தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம்.
அறந்தாங்கி மே 19
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாவது இரத்ததானம் முகாம் ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா தலைமை வகித்தார். கிளை தலைவர் அப்பாஸ் கான், செயலாளர் முகம்மது காசிம், பொருளாளர் அன்வர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த முகாமில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 30 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார்.
அவர் கூறும்போது “ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். மேலும் இம்முகாமில் பங்களிப்பு செய்த அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும் கிளை நிர்வாகத்திற்க்கும் நன்றியினைத் தெரிவித்தார்.