அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் இலவச மரகன்று வழங்கி, விழிப்புணர்வு விழா.
அறந்தாங்கி,ஆகஸ்ட்.10-
அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் அறந்தாங்கி அருகே உள்ள குருங்களூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் நடுதல், வழங்குதல், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் “அமரடக்கி புன்னகை அறக்கட்ளையின்” சார்பாக தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினரும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் தரவிகங்காசலம் மகன் ரிஷிரவி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி தலைமையில் குருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபால், புன்னகை அறக்கட்டளையின் பொதுக்குழு உறுப்பினர், சமூக சேவகர் பழனிதேவா என்ற பழனிப்பன், புன்னகை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் கலைபிரபு முன்னிலையில் மாவட்ட குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் இராமர், மாவட்டத் தலைவர் சிரஞ்சீவி, செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொய்யா, நெல்லி, மா, பலா உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினர்.