அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம்.

புதுக்கோட்டை, மே.16-

அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம்

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 75-வது சுதந்திர தின விழா உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் பாரம்பரிய கட்டிடமான ஹூமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டையங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலைகள் மற்றும் ரூபாய் தாள்கள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம்.

அரிய பொருட்கள்

தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது புதுக்கோட்டை அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் சென்னை அரசு அருங்காட்சியகங்களின் ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரிய பொருட்களை அமையுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம் என புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button