அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜூன்.13-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் லெம்பலக்குடி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மெர்சிரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அவா் பார்வையிட்டார். மேலும் குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கல்விகள் பயிற்றுவிப்பது குறித்தும், குழந்தைகளின் வருகை பதிவேடுகள் குறித்தும், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.