அரசர்குளம் ஜமாத்தார்களுக்கு
நேரில் சென்று நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்.
அறந்தாங்கி : ஜூன். 30
அரசர்குளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு
வாக்களித்து கார்த்திக் சிதம்பரத்தை வெற்றி பெற உறுதுணயாக இருந்த இஸ்லாமியர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார் பா.சிதம்பரம்.
இந்நிலையில் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பள்ளிவாசலுக்கு வருகை தந்த முன்னால் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்திற்கு சிறப்பு தொழுகை செய்யப்பட்ட பின் ஜமாத் தலைவர் குர்ஆன் கொடுத்து வரவேற்றார்.
அதன் பிறகு பேசிய பா.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டிட்ட கார்த்திக் சிதம்பரத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தமைக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்திய கூட்டணி எப்பொழுதும் அவரவர் மத வழிபாடுகளை வழிபட எந்த பாகுபாடும் காட்டாது என உறுதி அளிக்கிறேன் என கூறினார்.