அயலகத் தமிழர்கள் குடும்பத்தினருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை; அப்துல்லா எம்.பி. வழங்கினார்.
புதுக்கோட்டை, செப்.25-
அயலகத் தமிழர்கள் குடும்பத்தினருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாளஅட்டை வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் விடுமுறையில் தாயகம் வந்திருக்கும் அயலகத் தமிழர்கள் குடும்பத்தினர் உள்பட மொத்தம் 100 பேருக்கு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டையை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா வழங்கினார்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கிகள் அலுவலர் நந்தகுமார், மாவட்ட நலவாரிய இணை ஆணையர் ராஜ், தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1