அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு.
அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி மேலஸ்தானம் மற்றும் அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வினை பார்வையிட்ட நிகழ்வு.
இந்நிகழ்வினை அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எம்.அகமது தம்பி தலைமை வகித்தார். குறிஞ்சி நைனா முகமது முன்னிலை வகித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் பார்வையாளராக செயல்பட்டார்.
இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய ஜெயந்தி பார்வையிட்டு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வினை குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இப்பள்ளியில் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் துணைத் தலைவர் சித்ரா கல்வியாளர் முகமது இப்ராஹிம் மக்கள் பிரதிநிதிகள் சித்தி மதினா, பௌசியா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை தொகுத்து கல்வியாளர் ஜலில் ரகுமான் வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் ஸ்டாலின் , ரேகா ஹைடெக் லேப் இன்ஸ்பெக்டர்கள் சசிகலா மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.